எங்க பசங்க லாக்கர்ல வச்சுருக்கறத இந்தியாவுக்கு எதிரா எடுத்துவிடுவாங்க!! வக்கார் யூனிஸ் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 14, 2019, 11:43 AM IST
Highlights

பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஒரு போட்டி கைவிடப்பட்டதால் ஒரு பாயிண்ட் கிடைத்தது.

உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. 

எனவே முதன்முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்துவது கடினம். இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டி. 

ஏனெனில் அந்த அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஒரு போட்டி கைவிடப்பட்டதால் ஒரு பாயிண்ட் கிடைத்தது. அந்த வகையில், 4 போட்டிகளில் ஆடி வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் எனில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியாக வேண்டும். 

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் முக்கியமான போட்டியில், வீழ்த்துவதற்கு கடினமான இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் 16ம் தேதி மான்செஸ்டாரில் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பேசிய வக்கார் யூனிஸ், உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமெனில் இந்தியாவுக்கு எதிராக “ஏ ப்ளஸ்” ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய போட்டிதான். ஆனால் இந்த போட்டி, இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியமான போட்டி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வலிமையை காட்டியது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்திய அதே நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களுடனும் நம்பிக்கையுடனும் இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிரான சிறந்த ஆட்டத்தை பாகிஸ்தான் வீரர்கள் லாக்கரில் வைத்துள்ளார்கள் என்று நம்புவதாக வக்கார் யூனிஸ் தெரிவித்தார். 

லாக்கர்லயே வச்சுருக்க வேண்டியதுதான்.. 
 

click me!