ஈடன் கார்டன்லயே இருக்கு.. இங்கிலாந்துல இல்லையா..? மழை வந்தாலும் போட்டி நடக்க நம்ம தாதா சொல்லும் ஐடியா

By karthikeyan VFirst Published Jun 14, 2019, 11:03 AM IST
Highlights

மழையால் தொடர்ந்து போட்டிகள் கைவிடப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டௌண்டனில் நேற்று காலை முதல் மழை பெய்தது. மைதானம் ஈரமாக இருந்ததால், டாஸ் போட தாமதமானது. பின்னர் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டேயிருந்ததால் போட்டி கைவிடப்பட்டது. 
 

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த உலக கோப்பை தொடரில், வீரர்களை விளையாட விடாமல் மழை புகுந்து விளையாடுகிறது. மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியும் கைவிடப்பட்டது. இந்த உலக கோப்பை தொடரில் ரத்தாகும் நான்காவது போட்டி இது. 

மழையால் தொடர்ந்து போட்டிகள் கைவிடப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டௌண்டனில் நேற்று காலை முதல் மழை பெய்தது. மைதானம் ஈரமாக இருந்ததால், டாஸ் போட தாமதமானது. பின்னர் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டேயிருந்ததால் போட்டி கைவிடப்பட்டது. 

இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் மழை தான் ஆதிக்கம் செலுத்துகிறது. நியூசிலாந்து அணி 3 வெற்றிகளை பெற்ற நிலையில், மழையால் நான்கு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், புள்ளி பட்டியலில் நியூசிலாந்துக்கு மேல் மழை தான் உள்ளது. 

இங்கிலாந்தில் பெய்துவரும் மழையால் தொடர்ந்து போட்டிகள் ரத்தாவது, ரசிகர்களுக்கும் அணிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலக கோப்பை வர்ணனையாளருமான கங்குலி ஒரு தீர்வு கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய கங்குலி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மைதானத்தை மூடும் கவரை இங்கிலாந்திலும் பயன்படுத்தலாம். ஈடன் கார்டனில் பயன்படுத்தப்படும் கவர் இங்கிலாந்தில் இருந்துதான் வருகிறது. எனவே அதே கவர்களை இங்கும்(இங்கிலாந்தில்) பயன்படுத்தலாம். இவர்களுக்கு பாதி விலையில் வரிவிலக்குடன் கிடைக்கும். அந்த கவர் லேசாக இருப்பதால் மைதானத்தை பராமரிக்கும் ஊழியர்களுக்கு அதை இழுத்துச்சென்று மைதானத்தை மூடுவது எளிதாகத்தான் இருக்கும். 

அதை பயன்படுத்தினால் மழை நின்ற அடுத்த 10 நிமிடங்களில் போட்டியை தொடங்கிவிட முடியும். ஆனால் இங்கு மழை நின்றாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. உலக கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில், அதுவும் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கும் இங்கிலாந்தில் அந்த கவர்கள் கண்டிப்பாக அவசியம் என கங்குலி தெரிவித்துள்ளார். 
 

click me!