உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த 2 அணிகள் தான் மோதும்!! கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை ஆருடம்

By karthikeyan VFirst Published Jun 14, 2019, 10:25 AM IST
Highlights

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் தான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறே உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நல்ல பேலன்ஸான மற்றும் வலுவான அணிகளாக திகழ்வதோடு களத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுவருகின்றன. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மழை தான் அவ்வப்போது குறுக்கிட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அணிகளுக்கும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளித்துவிடுகிறது. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் தான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறே உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நல்ல பேலன்ஸான மற்றும் வலுவான அணிகளாக திகழ்வதோடு களத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுவருகின்றன. 

உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மோதும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆஸ்திரேலிய அணி கண்டிப்பாக அரையிறுதியில் இருக்கும் என்றும் அரையிறுதியில் எஞ்சிய ஒரு இடத்தை நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்று பிடிக்கும் என பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் தற்போதைய சூழலில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம். நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர் உலக கோப்பை குறித்த கணிப்பை தெரிவித்துவந்த நிலையில், கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சையும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

வாஷிங்டனில் நடந்த வர்த்தக சமிட் ஒன்றில் கலந்துகொண்டு, குளோபல் லீடர்ஷிப் அவார்டை வென்ற சுந்தர்பிச்சை, உலக கோப்பை குறித்து பேசும்போது, இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதி போட்டியில் மோதும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சிறந்த அணிகளாக உள்ளன என்று தெரிவித்தார். 
 
click me!