எங்களால் நெட் ரன்ரேட்டை உயர்த்த முடியாததற்கு இதுதான் காரணம்.. சர்ஃபராஸ் அகமது அதிரடி

By karthikeyan VFirst Published Jul 7, 2019, 5:29 PM IST
Highlights

உலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியது பாகிஸ்தான் அணி. 

இந்த உலக கோப்பையில் துரதிர்ஷ்டமான அணி என்றால் அது பாகிஸ்தான் தான். லீக் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய வலுவாக அணிகளை வீழ்த்தி 11 புள்ளிகளை பெற்றும் கூட அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. பாகிஸ்தான் அணி பெற்ற அதே 11 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது. 

உலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியது பாகிஸ்தான் அணி. ஆனாலும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியதுதான் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணம். 

பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து பெற்றுள்ள 11 புள்ளிகளை பெறும்பட்சத்தில் லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணிதான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்று வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்திருந்தார். 

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. பாயிண்ட்ஸுக்கு அடுத்து நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் தான் அரையிறுதி தேர்வு இருக்கும் என்பதால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. 

இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நல்ல அணிகளை வீழ்த்தியும் கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது தான் அதிருப்தியளிக்கக்கூடிய விஷயம் தான். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 105 ரன்கள் அடித்து படுதோல்வி அடைந்தது தான் பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் குறைவுக்கு காரணம். அந்த ஒரு தோல்வியிலேயே அந்த அணியின் ரன்ரேட் மைனஸ் ஐந்துக்கும் கீழாக சென்றுவிட்டது. அதிலிருந்து அந்த அணி மீண்டுவந்ததே பெரிய விஷயம் தான். 

உலக கோப்பை தொடரின் முதற்பாதியில் சொதப்பினாலும் இரண்டாம் பாதியில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது பாகிஸ்தான் அணி. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் உலக கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அதுகுறித்த அதிருப்தியை செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார். 

5 போட்டிகளில் வெற்றி பெற்றும் கூட அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது துரதிர்ஷ்டமான விஷயம். ஆனால் நாங்கள் ஆடிய ஆடுகளங்களின் தன்மை, எங்கள் அணியின் நெட் ரன்ரேட்டை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவானதாக இல்லை. எனவே தான் எங்கள் அணியால் நெட் ரன்ரேட்டை தேவையான அளவிற்கு உயர்த்த முடியவில்லை என்று சர்ஃபராஸ் அகமது தெரிவித்தார். 
 

click me!