PAK vs NZ: 2வது போட்டிக்கான பாக்., - நியூசி., அணிகளில் என்னென்ன மாற்றங்கள்..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jan 10, 2023, 10:19 PM IST
Highlights

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளுமே டிராவானதால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொண்டன.

அதனால் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இரு அணிகளும் ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றன. கராச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி11) கராச்சியில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

IND vs SL: தசுன் ஷனாகாவின் போராட்ட சதம் வீண்..! முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

2வது ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

ஆனால் நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் அறிமுகமான ஃபாஸ்ட் பவுலர் ஹென்ரி ஷிப்லிக்கு பதிலாக டௌக் பிரேஸ்வெல் களமிறங்க வாய்ப்புள்ளது.

உத்தேச பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஹாரிஸ் சொஹைல், அகா சல்மான், முகமது நவாஸ், உஸாமா மிர், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப்.

இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டும் பிரித்வி ஷா..! ரஞ்சி போட்டியில் ஒரே நாளில் 240 ரன்களை குவித்து சாதனை

உத்தேச நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், டேரைல் மிட்செல், டாம் லேதம், க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், டௌக் பிரேஸ்வெல், டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.
 

click me!