SA20: முதல் போட்டியில் எம்ஐ கேப்டவுன் - பார்ல் ராயல்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Jan 10, 2023, 9:11 PM IST

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் முதல் போட்டியில் பார்ல் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற MI கேப்டவுன் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 


தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் இன்று தொடங்கியது. இன்று (ஜனவரி 10) முதல் பிப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவில் இந்த டி20 லீக் தொடர் நடக்கிறது.

இன்று கேப்டவுனில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு சொந்தமான அணியான எம்.ஐ கேப்டவுன் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சொந்தமான பார்ல் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

Tap to resize

Latest Videos

undefined

சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சத சாதனைகளை தகர்த்தெறிந்தார் விராட் கோலி

கேப்டவுனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணியின் கேப்டனான ரஷீத் கான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் மில்லர் ஆவார். ஐபிஎல்லில் ரஷீத் கான் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இணைந்து ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ கேப்டவுன் அணி:

ராசி வாண்டர்டசன், கிராண்ட் ராயலோஃப்சென் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், ரியான் ரிக்கெல்டன், டெலானோ பாட்ஜியடெர், ஜார்ஜ் லிண்டே, சாம் கரன், ரஷீத் கான் (கேப்டன்), டுவான் யான்சென், ஆலி ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டும் பிரித்வி ஷா..! ரஞ்சி போட்டியில் ஒரே நாளில் 240 ரன்களை குவித்து சாதனை

பார்ல் ராயல்ஸ் அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), விஹான் லுப்பே, இயன் மோர்கன், டேவிட் மில்லர் (கேப்டன்), டேன் விலாஸ், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், ஃபார்ச்சூன், ரமான் சிம்மண்ட்ஸ், கோடி யூசுஃப், டப்ரைஸ் ஷம்ஸி.
 

click me!