சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சத சாதனைகளை தகர்த்தெறிந்தார் விராட் கோலி

Published : Jan 10, 2023, 06:00 PM IST
சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சத சாதனைகளை தகர்த்தெறிந்தார் விராட் கோலி

சுருக்கம்

சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளை தகர்த்துள்ளார்.   

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 2019லிருந்து 2022 ஆசிய கோப்பைக்கு முன்புவரை ஒரு சதம் கூட அடிக்காத விராட் கோலி கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து, மீண்டும் தனது சத கணக்கை தொடங்கினார்.

அதன்பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து, 2022ம் ஆண்டை சதத்துடன் முடித்த விராட் கோலி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று சதமடித்து, 2023ம் ஆண்டை சதத்துடன் தொடங்கியுள்ளார். 

ODI-யில் 45வது சதமடித்து சாதனை படைத்த கோலி! மெகா ஸ்கோர் அடித்து இலங்கைக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

இலங்கைக்கு எதிராக இன்று நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 45வது சதத்தை விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது விராட் கோலியின் 73வது சதமாகும்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 100 சதங்கள் அடித்துள்ள சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சச்சினுக்கு (49 சதங்கள்) அடுத்த 2ம் இடத்தில் 43 சதங்களுடன் உள்ளார் விராட் கோலி. 

இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 9வது சதம் இது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 8 சதங்களுடன் அதிக சதமடித்த வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். 

இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டும் பிரித்வி ஷா..! ரஞ்சி போட்டியில் ஒரே நாளில் 240 ரன்களை குவித்து சாதனை

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 9 சதங்களுடன், ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான விராட் கோலி, இப்போது இலங்கைக்கு எதிராகவும் 9 சதங்கள் அடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் 2 அணிகளுக்கு எதிராக 9 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் விராட் கோலி.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: ஒரு வழியாக டாஸ் வென்ற SKY.. இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!
வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!