Pakistan vs Australia: முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Mar 3, 2022, 8:16 PM IST
Highlights

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆஸ்திரேலிய அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி அடங்கிய நீண்ட தொடரில் ஆடுகிறது.

முதலில் டெஸ்ட் தொடரும், பின்னர் ஒருநாள் தொடரும், கடைசியாக ஒரு டி20 போட்டியும் நடக்கவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நாளை(மார்ச் 4) தொடங்குகிறது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுக்குமே இது முக்கியமான தொடர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும் என்பதால் முதலிரண்டு இடங்களுக்காகத்தான் அனைத்து அணிகளுமே போராடும்.

இந்த தொடர் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இது முக்கியமான தொடர். 

ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்று, அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணியும் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று, சொந்த மண்ணில் ஆடும் கூடுதல் பலத்துடனும் உத்வேகத்துடனும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

உத்தேச பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத்/இமாம் உல் ஹக், அப்துல்லா ஷாஃபிக், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், நௌமான் அலி, சஜித் கான், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.
 
உத்தேச ஆஸ்திரேலிய அணி:

உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!