தூக்கி எறியப்பட்ட சீனியர் வீரர்.. நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Jun 19, 2019, 4:25 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி இன்று நடக்கிறது. 

உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்க அணிக்கு மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்று 3 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்க அணி. 

நியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி நல்ல பேலன்ஸான மற்றும் வலுவான அணியாக திகழ்கிறது. வில்லியம்சன், கப்டில், டெய்லர், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் நல்ல ஃபார்மில் ஆடிவருகின்றனர். ஆனால் தென்னாப்பிரிக்க அணியில் டி காக் மற்றும் டுப்ளெசிஸை தவிர மற்ற யாருமே சோபிக்கவில்லை. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது தென்னாப்பிரிக்க அணி. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்ததால், அதன்பின்னர் 3 போட்டிகளில் ஆடாத ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடி, உடற்தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியில் ஆடுகிறார். 

தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான ஜேபி டுமினி இந்த போட்டியில் ஆடவில்லை. அவரை பென்ச்சில் உட்காரவைத்துவிட்டனர். ஆனால் ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் டேவிட் மில்லர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், தென்னாப்பிரிக்க அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

நியூசிலாந்து அணி:

கப்டி, முன்ரோ, வில்லியம்சன்(கேப்டன்), டெய்லர், லதாம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னெர், மேட் ஹென்ரி, லாக்கி ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

தென்னாப்பிரிக்க அணி:

டி காக், ஆம்லா, மார்க்ரம், டுப்ளெசிஸ்(கேப்டன்), வாண்டெர் டசன், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஃபெலுக்வாயோ, ரபாடா, இங்கிடி, இம்ரான் தாஹிர்.
 

click me!