நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 7:21 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

டி20 உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான முக்கியமான போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இரு அணிகளுமே இதற்கு முன் ஆடிய ஒரு போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இதற்கு பிறகு இந்த இரு அணிகளும் எதிர்கொள்ளப்போகும் அணிகள், ஆஃப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து. இவற்றில் ஆஃப்கானிஸ்தான் மட்டுமே சவாலளிக்கக்கூடிய அணி. 

நமீபியா மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்த 2 அணிகளுமே வெற்றி பெற்றுவிடும். அந்தவகையில் பார்க்கும்போது, இந்த போட்டி இந்த இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. அதனால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கியுள்ளன.

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் அணிக்குள் வந்துள்ளதால், அவர் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கப்போகிறார். அதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் நடக்கவுள்ளன.

புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் அமீரகத்தில் சரியாக பந்துவீசவில்லை. ஐபிஎல்லிலுமே அவர் பெரிதாக சோபிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராகவும் சரியாக வீசாததையடுத்து, பேட்டிங்கும் ஆடவல்ல மிதவேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாகூரின் வருகை இந்திய அணியின் பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷமி, பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிம் சௌதிக்கு பதிலாக ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.
 

click me!