டி20 உலக கோப்பை: முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Nov 9, 2022, 1:23 PM IST

டி20 உலக கோப்பையில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 


டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியது. குறிப்பாக இந்த அரையிறுதி போட்டி நடக்கும் சிட்னியில் நியூசிலாந்து அணி அபாரமாக ஆடியிருக்கிறது. சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் 200 ரன்களை குவித்து, 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து. அதன்பின்னர் சிட்னியில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் க்ளென் ஃபிலிப்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். எனவே சிட்னி ஆடுகளம் நியூசிலாந்துக்கு நன்கு பழக்கப்பட்டது மட்டுமல்லாது, ஏற்றதும் கூட. 

Tap to resize

Latest Videos

undefined

IPL 2023: உங்க டைம் முடிந்தது பொல்லார்டு.. நீங்க கிளம்பலாம்! 12 வீரர்களை கொத்தா கழட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ்

மேலும் சிட்னியில் முதலில் பேட்டிங் ஆடிய அணி தான் பெரிய ஸ்கோரை அடித்து, இலக்கை அடிக்கவிடாமல் தடுத்து ஜெயித்திருக்கின்றன. அந்தவகையில், சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசி போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன்.

டி20 உலக கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.
 

click me!