கான்வே, டேரைல் மிட்செல் அதிரடி சதம்.. வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து

Published : Mar 26, 2021, 04:54 PM IST
கான்வே, டேரைல் மிட்செல் அதிரடி சதம்.. வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து

சுருக்கம்

கான்வே மற்றும் டேரைல் மிட்செலின் அதிரடி சதத்தால் கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.  

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 318 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி வீரர்கள் கான்வே மற்றும் டேரைல் மிட்செல் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சதமடித்தனர்.

அதிரடியாக ஆடிய கான்வே 110 பந்தில் 17 பவுண்டரிகளுடன் 126 ரன்களை குவிக்க, மிட்செல் 92 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் நியூசிலாந்து அணி 318 ரன்களை குவித்தது.

319 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணியில் மஹ்மதுல்லா மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துவந்த வங்கதேச அணியில் மஹ்மதுல்லா மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்ததால் 154 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம். மஹ்மதுல்லா 76 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

வங்கதேச அணி 154 ரன்களில் சுருண்டதையடுத்து, 164 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையுமே கான்வே வென்றார்.
 

PREV
click me!

Recommended Stories

வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!