இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் கம்பேக்

Published : Feb 17, 2020, 10:49 AM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் கம்பேக்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 5-0 என இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து வென்றது. 

அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. வரும் 21ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட் காயத்திலிருந்து குணமடைந்து உடற்தகுதியை பெற்றுவிட்டதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வலது கையில் காயமடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் டிரெண்ட் போல்ட் ஆடவில்லை. 

இந்நிலையில், காயம் குணமடைந்திருப்பதால், அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வலுவான மற்றும் அனுபவமான இந்திய அணியை எதிர்கொள்ள டிரெண்ட் போல்ட் போன்ற அனுபவமான பவுலர்கள் அணிக்கு தேவை. 

ஒருநாள் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக பந்துவீசிய கைல் ஜாமிசனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் கேன் வில்லியம்சன் தலைமையிலான டெஸ்ட் அணியில், டாம் லேதம், டாம் பிளண்டெல், டி கிராண்ட் ஹோம், டேரைல் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டெய்லர், டிம் சௌதி, வாட்லிங், வாக்னர் ஆகியோரும் உள்ளனர். 

Also Read - பட்லர், பேர்ஸ்டோ, மோர்கன் அதிரடி பேட்டிங்.. கடின இலக்கை அசால்ட்டா அடித்து தொடரை வென்ற இங்கிலாந்து

நியூசிலாந்து டெஸ்ட் அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), டாம் பிளண்டெல், டிரெண்ட் போல்ட், காலின் டி கிராண்ட் ஹோம், கைல் ஜாமிசன், டாம் லேதம், டேரைல் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சௌதி, ரோஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங். 
 

PREV
click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!