ENG vs NZ: கேன் வில்லியம்சனுக்கு கொரோனா.. நியூசிலாந்துக்கு 2வது டெஸ்ட்டில் கடும் பின்னடைவு

By karthikeyan VFirst Published Jun 10, 2022, 10:49 AM IST
Highlights

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அவர் ஆடவில்லை.
 

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. லண்டன் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி புத்துணர்ச்சி பெற்று சிறப்பாக ஆடிவரும் நிலையில், நியூசிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட் ஹோம் காயம் காரணமாக ஆடவில்லை.

இந்நிலையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு எடுத்த ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட்டில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு அவர் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதனால் இன்று நாட்டிங்காமில் தொடங்கும் 2வது டெஸ்ட்டில் அவர் ஆடமாட்டார். 

கேன் வில்லியம்சன் ஆடாதது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது, கேப்டனாகவும் அவரை நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட்டில் ரொம்ப மிஸ் செய்யும்.
 

click me!