#BANvsNZ 3வது டி20: நியூசிலாந்தை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டி எளிய இலக்கை விரட்டும் வங்கதேசம்..!

Published : Sep 05, 2021, 05:35 PM IST
#BANvsNZ 3வது டி20: நியூசிலாந்தை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டி எளிய இலக்கை விரட்டும் வங்கதேசம்..!

சுருக்கம்

3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியை 128 ரன்களுக்கு சுருட்டி 129 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது வங்கதேச அணி.  

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் 2 டி20 போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது டி20 இன்று நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியி ஃபின் ஆலன்(15), ரவீந்திரா(20), வில் யங்(20), டி கிராண்ட் ஹோம்(0), கேப்டன் டாம் லேதம்(5) ஆகிய 5 வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 11 ஓவரில் 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸும், டாம் பிளண்டெலும் இணைந்து பொறுப்புடன் ஆடி, படுமோசமாக சுருளாமல் பார்த்துக்கொண்டனர். நிகோல்ஸ் 36 ரன்களும் பிளண்டெல் 30 ரன்களும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவரில் வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்தது நியூசிலாந்து அணி. இதையடுத்து 129 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவருகிறது வங்கதேச அணி.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?