ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் நியூசிலாந்து! 3 இடம் பின்தங்கிய இங்கிலாந்து; இந்திய அணிக்கும் பின்னடைவு

Published : May 03, 2021, 08:52 PM IST
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் நியூசிலாந்து! 3 இடம் பின்தங்கிய இங்கிலாந்து; இந்திய அணிக்கும் பின்னடைவு

சுருக்கம்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.  

ஐசிசி ஒருநாள் தரவரிசையை அப்டேட் செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது. வங்கதேசத்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற நியூசிலாந்து அணி, வேறு எந்த தொடரிலும் ஆடவில்லை. எனவே 121 புள்ளிகளுடன் முதலித்திற்கு முன்னேறியது.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி, கடந்த ஓராண்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் 2-1 என ஒருநாள் தொடரில் தோற்றதன் விளைவாக, 3 இடங்கள் பின் தங்கி, 4ம் இடத்திற்கு சென்றுவிட்டது.

3ம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஒரு இடம் முன்னேறி 118 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு சென்றது. 2ம் இடத்தில் இருந்த இந்திய அணி ஒரு இடம் பின் தங்கி 115 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!