#IPL2021 அடுத்தடுத்து உறுதியாகும் கொரோனா..! ஆனாலும் ஐபிஎல் ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்

By karthikeyan VFirst Published May 3, 2021, 5:35 PM IST
Highlights

கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணியை சேர்ந்த மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஐபிஎல் தொடர் ரத்தாகுமா என்ற சந்தேகமும் கேள்வியும் பலருக்கு எழுந்த நிலையில், அதுகுறித்து பிசிசிஐ அதிகாரி தெளிவுபடுத்தியிருக்கிறார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இதுவரை ஐபிஎல் 14வது சீசன் வெற்றிகரமாக எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்துவந்த நிலையில், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கவிருந்த நிலையில், கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியானதையடுத்து, இன்று நடக்கவிருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கேகேஆர் அணி அடுத்ததாக வரும் 8ம் தேதி டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தபோட்டியும் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் சிஎஸ்கே அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி மற்றும் பஸ் க்ளீனர் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியானது.

கேகேஆர் அணி வீரர்களை தொடர்ந்து, சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது ஐபிஎல் தொடர்ந்து நடத்துவதை சிக்கலாக்கியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே, ஐபிஎல் மட்டும்தான் சில மணி நேர மகிழ்ச்சியை இந்தியர்களுக்கு அளித்துவந்த நிலையில், இப்போது அதற்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், வேறு போட்டிகள் எதுவும் ஒத்திவைக்கப்பட வாய்ப்பில்லை என்றும், திட்டமிட்டபடி நடக்கும் என்றும் பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!