#NZvsBAN 2வது ஒருநாள்: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Mar 22, 2021, 10:15 PM IST
#NZvsBAN 2வது ஒருநாள்: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கிறது.

கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்து கடைசியாக ஆடிய 10 போட்டிகளில் 7ல் வென்றுள்ளது. மேலும் நியூசிலாந்து அணி வலுவாகவும் உள்ளதால் வெற்றி வாய்ப்பு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கே அதிகமாக உள்ளது.

இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், ஹென்ரி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன்(கேப்டன்), கான்வே, வில் யங், டாம் லேதம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், கைல் ஜாமிசன், மேட் ஹென்ரி, டிரெண்ட் போல்ட்.

உத்தேச வங்கதேச அணி:

தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், முஷ்ஃபிகுர் ரஹீம், முகமது மிதுன், மஹ்மதுல்லா, மெஹிடி ஹசன், மஹடி ஹசன், டஸ்கின் அஹமது, ஹசன் மஹ்மூத், முஷ்ஃபிகுர் ரஹ்மான்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SL Test: படிக்கல், ஜுரல் அசத்தல் சதம்! ரன்மலையைக் குவித்த இந்தியா
IND vs SL: வரலாறு படைத்த ஜடேஜா! WTC கிரிக்கெட்டில் 'நம்பர் 1' நாயகன்! மெகா சாதனை!