#IPL2021 பஞ்சாப் கிங்ஸ் வீரரை தட்டி தூக்கிய சிஎஸ்கே

Published : Mar 22, 2021, 09:12 PM IST
#IPL2021 பஞ்சாப் கிங்ஸ் வீரரை தட்டி தூக்கிய சிஎஸ்கே

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹார்டஸ் வில்ஜோனை நெட் பவுலராக சிஎஸ்கே எடுத்துள்ளது.  

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹார்டஸ் வில்ஜோனை நெட் பவுலராக சிஎஸ்கே எடுத்துள்ளது.

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் செம கம்பேக் கொடுக்கும் முனைப்பில் முதல் அணியாக சென்னையில் கேம்ப்பை போட்டு பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த சீசனுக்கான நெட் பவுலராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஹார்டஸ் வில்ஜோனை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி. 2019 ஐபிஎல்லில் வில்ஜோன் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடினார். 2020 ஐபிஎல் சீசனில் அவர் ஆடாத நிலையில், அவரை சிஎஸ்கே அணி நெட் பவுலராக எடுத்துள்ளது.

சிஎஸ்கே அணி, 14வது சீசனுக்கான ஏலத்தில், கிருஷ்ணப்பா கௌதம், மொயின் அலி, புஜாரா, ஹரி நிஷாந்த், ஹரிசங்கர் ரெட்டி, கே.பகத் வர்மா ஆகிய வீரர்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!