#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மரண அடி..! முக்கியமான வீரரே விலகல்

By karthikeyan VFirst Published Mar 22, 2021, 6:00 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் ஆடவில்லை.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லுக்கான தயாரிப்பை முதல் அணியாக சிஎஸ்கே ஏற்கனவே தொடங்கிவிட்டது. மற்ற அணிகளும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கழட்டிவிட்டு, இந்த சீசனில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் களமிறங்கவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர மற்றும் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக ஆர்ச்சர் திகழ்கிறார். அந்த அணியின் வெற்றிக்கு பவுலிங்கை பொறுத்தமட்டில் ஆர்ச்சரையே அதிகமாக சார்ந்துள்ளது. ஆர்ச்சருக்கு உறுதுணையாக 2வது பவுலர் தான் எவராக இருந்தாலும் என்ற நிலை அந்த அணியில் உள்ளது.

அந்தவகையில், தான், ரூ.16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. அந்தளவிற்கு ஆர்ச்சரை சார்ந்திருக்கிறது ராஜஸ்தான் அணி. இந்நிலையில், முழங்கை காயத்தால் ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதி தொடரில் ஆர்ச்சர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழங்கை காயத்தால் அவதிப்பட்டுவந்த ஆர்ச்சர், இந்தியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும் ஆடினார். அதனால் அவரது காயம் பெரிதானது. அதன் விளைவாக, அவர் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. அவரது காயம் சரியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்பதால், ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் ஆர்ச்சர் ஆடவில்லை. ஆர்ச்சர் ஆடாதது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். 
 

click me!