#INDvsENG முதல் ஒருநாள் போட்டி: உத்தேச இங்கிலாந்து அணி

By karthikeyan VFirst Published Mar 22, 2021, 5:00 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.
 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியாவிடம் இழந்த நிலையில், டி20 தொடரையும் இழந்தது இங்கிலாந்து அணி.

எனவே அடுத்ததாக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து. வரும் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் புனேவில் நடக்கவுள்ளன. ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். பட்லர், ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், சாம் கரன் ஆகியோர் ஆடுவார்கள். 

ஸ்பின்னர்களாக மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக மார்க் உட் மற்றும் டாம் கரன் ஆகிய இருவரும் ஆடுவர்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஒயின் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், சாம் கரன், மொயின் அலி, டாம் கரன், மார்க் உட்/ரீஸ் டாப்ளி, அடில் ரஷீத்.
 

click me!