உனக்கு உடற்தகுதி தேர்வுலாம் பண்ண முடியாது.. முடிஞ்சத பாரு.. பும்ராவை விரட்டிவிட்ட ராகுல் டிராவிட்.. ராகுலுக்கு பக்கபலமா இருக்கும் கங்குலி

By karthikeyan VFirst Published Dec 21, 2019, 4:41 PM IST
Highlights

காயத்திலிருந்து மீண்ட பும்ரா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் வழிமுறைகளை பின்பற்றி அங்கு பயிற்சி பெறாததால், அவருக்கு உடற்தகுதி டெஸ்ட் செய்ய முடியாது எனக்கூறி அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் திருப்பியனுப்பினார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் ஒவ்வொரு வீரரும், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சான்று பெற்ற பின்னர்தான் இந்திய அணியில் இணைய முடியும். 

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் செயல்பட்டுவருகிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட், அதிலிருந்து நீக்கப்பட்டு, இந்திய அணிக்கு வீரர்களை தயார்படுத்தி அனுப்பும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பொறுப்பிலும் மிகவும் நேர்மையாக தனது பணியை செய்து கொண்டிருக்கிறார் ராகுல் டிராவிட். 

இந்திய அணிக்கு தயாராகும் வீரர்கள் மட்டுமல்ல; காயமடைந்த வீரர்களும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று உடற்தகுதி சான்று பெற்ற பின்னர் தான் மீண்டும் இந்திய அணியில் ஆட முடியும். 

அந்தவகையில், முதுகுப்பகுதியில் காயமடைந்த இந்திய அணியின் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான பும்ரா, தேசிய கிரிக்கெட் கிரிக்கெட் அகாடமியின் மருத்துவர்கள், உடற்தகுதி நிபுணர்களை கொண்டு பயிற்சி பெறாமல், தனியாக மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை நியமித்து பயிற்சி பெற்றார். உடற்தகுதி பெற்றுவிட்ட பும்ரா, இந்திய அணியில் இணைவதற்காக, தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பரிசோதனைக்காக வந்தார். 

அவரை, தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்சிஏ) பயிற்சி பெறுமாறு அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை விரும்பாத பும்ரா, வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக விசாகப்பட்டினத்தில் அணியினருடன் இணைந்து பயிற்சியில் பந்துவீசினார். அதனால் செம கடுப்பான என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட், பும்ராவின் உடற்தகுதியை டெஸ்ட் செய்ய முடியாது எனக்கூறி திருப்பியனுப்பிவிட்டார். 

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் என்சிஏ-வில் இணைந்து உடற்தகுதியை நிரூபித்து சான்று பெற்ற பின்னர்தான் இந்திய அணிக்கு வர வேண்டும். அதுதான் வழிமுறை. பும்ரா கேட்டிருந்தால் என்சிஏ-வே சிறந்த மருத்துவர்களையும் நிபுணர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும். அவர் என்சிஏ-விற்கு கீழேயே பயிற்சி பெற்றிருக்கலாம். டிராவிட் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. அவர் மிகச்சிறந்த வீரர். அவரது அர்ப்பணிப்பும் பங்களிப்பும் அபாரமாக இருக்கும். எனவே அவரது தலைமையில் என்சிஏ மிகச்சிறப்பானதாக உருவாகும் என்று கங்குலி தெரிவித்தார். 

click me!