பஞ்சாப் ஸ்பின்னரோட பவுலிங்கை பொளந்து கட்டியது எப்படி..? சன்ரைசர்ஸ் வீரர் பகிரங்கம்

By karthikeyan VFirst Published Apr 30, 2019, 2:12 PM IST
Highlights

எஞ்சிய 2 இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ள நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 212 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் அணியை 167 ரன்களில் சுருட்டி 45 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய 2 இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ள நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 212 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் அணியை 167 ரன்களில் சுருட்டி 45 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி அபாரமாக பேட்டிங் ஆடியது. வார்னரும் சஹாவும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் வில்லியம்சனும் முகமது நபியும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 

பஞ்சாப் அணியின் நட்சத்திர பவுலரான முஜீபுர் ரஹ்மானின் பவுலிங்கை சன்ரைசர்ஸ் வீரர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். 4 ஓவர்கள் வீசி 66 ரன்களை விட்டுக்கொடுத்தார் முஜீபுர். ஆஃப்கானிஸ்தான் வீரரான முஜீபுர் ரஹ்மான் வீசிய 18வது ஓவரில் தேசிய அணியில் ரஹ்மானின் சக வீரரான முகமது நபி இரண்டு சிக்சர்களை விளாசினார். 4வது ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்த முஜீபுர் ரஹ்மானின் 18வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 26 ரன்கள் எடுக்கப்பட்டது. அதில் 2 சிக்ஸர்கள் முகமது நபி அடித்தது. 

முதல் இன்னிங்ஸுக்கு பின் பேசிய முகமது நபி, முஜீபுர் ரஹ்மானின் பவுலிங்கை எளிதாக அடித்தது எப்படி என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய முஜீபுர் ரஹ்மான், முஜீபுரின் பவுலிங்கை அடித்து ஆடுவது எனக்கு எளிது. ஏனெனில் தேசிய அணிக்காக நாங்கள் ஒன்றாக ஆடுவதால் அவரது பவுலிங்கை நான் நிறைய ஆடியிருப்பது மட்டுமல்லாமல் அவரது கையசைவுகளும் எனக்கு நன்றாக தெரியும். அவர் எப்படியான பந்தை வீசப்போகிறார் என்பதை அவரது கையசைவின் மூலமே எனக்கு தெரியும். அதனால்தான் என்னால் அவரது பவுலிங்கை எளிதாக அடிக்க முடிந்தது என்று முகமது நபி தெரிவித்தார். 
 

click me!