பிரேக்கிற்கு பிரேக் போட்ட தமிழக வீரர்.. அதை மட்டும் செஞ்சுருந்தா மேட்ச் தலைகீழா மாறியிருக்கும்

By karthikeyan VFirst Published May 8, 2019, 12:32 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் சிஎஸ்கேவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அது ஒருபுறமிருந்தாலும், இந்த ஸ்கோரையே சிஎஸ்கேவால் கட்டுப்படுத்தியிருக்கக்கூடும். 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் இரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் நேற்று மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங் ஆடியது. ஸ்பின் பவுலிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது ஆடுகளம். ஆடுகளத்தின் தன்மையை ராகுல் சாஹர், க்ருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகிய மூவரும் நன்கு பயன்படுத்தி கொண்டனர். சிஎஸ்கே வீரர்களை தொடக்கம் முதலே ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தியதோடு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தோனியும் ராயுடுவும் சேர்ந்து ஓரளவிற்கு ரன் சேர்த்தனர். ஆனாலும் சிஎஸ்கே போதாத ஸ்கோருடன் தான் இன்னிங்ஸை முடித்தது.

சிஎஸ்கே அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியிலும் இம்ரான் தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்கள் இருப்பதால், சிஎஸ்கே அணி கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் 132 ரன்கள் என்பது மிகவும் எளிதான இலக்கு என்பதால், ரோஹித், டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தபோதும், சூர்யகுமார் அவசரப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினார். கடைசி வரை களத்தில் நின்று மும்பை இந்தியன்ஸை வெற்றி பெற செய்தார். 

19வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் சிஎஸ்கேவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது என்பது ஒருபுறமிருந்தாலும், இந்த ஸ்கோரையே சிஎஸ்கேவால் கட்டுப்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் அனுபவ ஸ்பின்னர்கள் இம்ரான் தாஹிட், ஹர்பஜன், ஜடேஜா ஆகியோர் அணியில் உள்ளனர். ரோஹித், டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளை சிஎஸ்கே விரைவில் வீழ்த்தியபோதும் சூர்யகுமார் யாதவ் தான் தெளிவாக ஆடி அரைசதம் அடித்து மும்பை இந்தியன்ஸை வெற்றி பெற செய்தார். 

விக்கெட்டை விட்டுவிடக்கூடாது என்பதை உறுதியாகவும் தெளிவாக இருந்த சூர்யகுமார், சிஎஸ்கேவிற்கு வெற்றி வாய்ப்பை விட்டு கொடுக்கவேயில்லை. சிஎஸ்கே அணியை பதற்றத்திலேயே வைத்திருந்தார். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடியை அதிகரித்ததோடு அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 

சூர்யகுமாரின் பேட்டிங் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்தது. எனவே சூர்யகுமாரை வீழ்த்தியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும். அதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அதை மிட் ஆன் திசையில் நின்ற முரளி விஜய் தவறவிட்டார். சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் இருந்தபோது தீபக் சாஹர் வீசிய 5வது ஓவரின் மூன்றாவது பந்தை தூக்கி அடிக்க, அதை மிட் ஆன் திசையில் நின்ற முரளி விஜய் கேட்ச் பிடித்திருக்கலாம். ஆனால் கடினமில்லாத அந்த கேட்ச்சை முரளி விஜய் தவறவிட்டார். 

அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சூர்யகுமார் யாதவ் அதன்பின்னர் மிகவும் பாதுகாப்பாக தூக்கி அடித்தார். மிகக்கவனமுடனும் பொறுப்புடனும் ஆடினார் சூர்யகுமார். பந்தை தேவையில்லாமல் தூக்கி அடிக்கவே இல்லை. தெளிவாக ஆடி வெற்றியை மும்பை இந்தியன்ஸிடம் இருந்து பறித்தார். ஒருவேளை அந்த கேட்ச்சை பிடித்திருந்தால், பவர்பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கலாம். தொடர் விக்கெட்டுகள் சரிவால் மும்பை அணிக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும். ஆனால் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால் சூர்யகுமாரும் இஷான் கிஷானும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து சிஎஸ்கேவின் நம்பிக்கையை தகர்த்தனர். ஆட்டத்தின் பிரேக்கிங் பாயிண்ட்டாக அமைந்திருக்க வேண்டிய கேட்ச்சை தவறவிட்டு பிரேக்கிற்கு பிரேக் போட்டு தடுத்துவிட்டார் முரளி விஜய்.
 

click me!