யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த நிலையில் தான் இன்று நடக்கும் 14ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடம் பிடிக்கும். யுபி வாரியர்ஸ் வெற்றி பெற்றால் 2ஆவது இடத்திற்கு முன்னேறும். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. யுபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யுபி வாரியர்ஸ்:
அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), கிரன் நவ்கிரே, சமரி அத்தபத்து, கிரேஸ் ஹாரிஸ், ஷ்வேதா ஷெராவத், தீப்தி சர்மா, உமா சேத்ரி, பூனம் கேம்னர், ஷோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், சைமா தாக்கூர்.
மும்பை இந்தியன்ஸ்:
ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கேர், பூஜா வஸ்த்ரேகர், அமன்ஜோத் கவுர், சஜீவன் சஜனா, ஹூமைரா கஸீ, சப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.