MI vs SRH: டாஸ் ரிப்போர்ட்.. மும்பை இந்தியன்ஸில் 2 மாற்றங்கள்; சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றம்

Published : May 17, 2022, 07:22 PM IST
MI vs SRH: டாஸ் ரிப்போர்ட்.. மும்பை இந்தியன்ஸில் 2 மாற்றங்கள்; சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றம்

சுருக்கம்

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டதால், சன்ரைசர்ஸ் அணிக்குத்தான் இது முக்கியமான போட்டி.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்பின்னர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளனர். குமார் கார்த்திகேயா மற்றும் ரித்திக் ஷோகீன் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு மயன்க் மார்கண்டே மற்றும் சஞ்சய் யாதவ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட்கீப்பர்), ரோஹித் சர்மா, திலக் வர்மா, ராமன் தீப் சிங், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிம் டேவிட், சஞ்சய் யாதவ், டேனியல் சாம்ஸ், மயன்க் மார்கண்டே, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.

சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கோ யான்செனுக்கு பதிலாக ஃபஸால் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட்கீப்பர்), ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், ஃபஸால் ஃபரூக்கி, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!