IPL 2021 MI அணியில் ஹர்திக் பாண்டியா கம்பேக்..! இனியும் உன்னை நம்பி யூஸ் இல்ல.. மீண்டும் வேலையை காட்டிய கோலி

By karthikeyan VFirst Published Sep 26, 2021, 7:23 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி துபாயில் நடக்கிறது.

இந்த 2 அணிகளுமே இந்த சீசனின் 2ம் பாகத்தில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், அமீரகத்தில் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்வதுடன், பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்ய இந்த 2 அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்பதால், வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் கடந்த 2 போட்டிகளில் ஆடாத ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் ஆடுகிறார். அவர் அணிக்குள் வந்திருப்பதால், சவுரப் திவாரி நீக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், பும்ரா, போல்ட்.

ஆர்சிபி அணியில் ஹசரங்கா நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் கைல் ஜாமிசன் சேர்க்கப்பட்டுள்ளார். அமீரக ஐபிஎல் பாகம் தொடங்குவதற்கு முன்பாக ஹசரங்காவிற்கு ஓவர் பில்டப் கொடுத்த கோலி, 2 போட்டிகளில் வாய்ப்பும் அளித்தார். அவர் சோபிக்காத நிலையில், இந்த போட்டியில் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டார். 

அதேபோலவே கடந்த போட்டியில் ஆடிய டிம் டேவிட் சரியாக ஆடாத நிலையில், அவரை நீக்கிவிட்டு டேனியல் கிறிஸ்டியனை சேர்த்துவிட்டார் கோலி.

பொதுவாகவே, சரியாக ஆடாத வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்கமாட்டார் கோலி. அதை மீண்டுமொரு முறை செய்து, நான் அப்படித்தான் என்று நிரூபித்திருக்கிறார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷபாஸ் அகமது, டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சாஹல்.
 

click me!