MI vs DC: வாழ்வா சாவா போட்டியில் DC அணியின் அதிரடி வீரர் கம்பேக்..! டாஸ் ரிப்போர்ட்.. MI அணியில் 2 மாற்றங்கள்

By karthikeyan VFirst Published May 21, 2022, 7:17 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸூக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், அந்த அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை. 

ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும். தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும்.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிரிஸ்டான் ஸ்டப்ஸுக்கு பதிலாக மீண்டும் டிவால்ட் ப்ரெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சய் யாதவுக்கு பதிலாக ரித்திக் ஷோகீன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் ப்ரெவிஸ், திலக் வர்மா, டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ரமன் தீப் சிங், ரித்திக் ஷோகீன், பும்ரா, ரிலே மெரிடித், மயன்க் மார்கண்டே.

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு வாழ்வா சாவா போட்டியில் அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா கம்பேக் கொடுத்துள்ளார். எனவே லலித் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது.
 

click me!