MI vs DC: MI அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம்..? நெட்டில் துல்லியமான யார்க்கர்களை வீசிய அர்ஜுன்.. வீடியோ

Published : May 21, 2022, 02:15 PM IST
MI vs DC: MI அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம்..? நெட்டில் துல்லியமான யார்க்கர்களை வீசிய அர்ஜுன்.. வீடியோ

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ஆடவுள்ள நிலையில், வலைப்பயிற்சியில் மும்பை அணி பவுலர் அர்ஜுன் டெண்டுல்கர் துல்லியமான யார்க்கர்களை வீசி அசத்தினார்.  

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. 

இன்று மும்பை அணி அதன் கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. இதுதான் டெல்லி அணிக்கும் கடைசி போட்டி. மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால் இந்த போட்டியில் மும்பை அணிக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் டெல்லி அணிக்கு இது முக்கியமான போட்டி. இந்த போட்டியில் ஜெயித்தால்தான் டெல்லி அணி பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும்.

இந்த சீசனில் மும்பை அணி மோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்துக்கொண்டிருந்தபோதே, இந்த சீசனின் பாதியிலேயே, மும்பை அணியில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் மகனும் இடது கை ஃபாஸ்ட் பவுலருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்திவந்தனர்.

2 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு இதுவரை ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. நெட்டில் நன்றாக பந்துவீசிவரும் அவருக்கு அணியில் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான பயிற்சியின்போது நெட்டில் துல்லியமான யார்க்கர்களை வீசி அர்ஜுன் டெண்டுல்கர் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்த வீடியோவை மும்பை அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. எனவே அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் அவரது அறிமுகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர் துல்லியமான யார்க்கர்களை வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test: படிக்கல், ஜுரல் அசத்தல் சதம்! ரன்மலையைக் குவித்த இந்தியா
IND vs SL: வரலாறு படைத்த ஜடேஜா! WTC கிரிக்கெட்டில் 'நம்பர் 1' நாயகன்! மெகா சாதனை!