CSK vs MI: எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொல்லார்டை தூக்கி எறிந்த மும்பை இந்தியன்ஸ்..! டாஸ் ரிப்போர்ட்

Published : May 12, 2022, 07:22 PM ISTUpdated : May 12, 2022, 07:24 PM IST
CSK vs MI: எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொல்லார்டை தூக்கி எறிந்த மும்பை இந்தியன்ஸ்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

CSK vs MI live match toss report: சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு பின்புற வாய்ப்பு கொஞ்சம் உள்ளது. எனவே சிஎஸ்கே அணிக்குத்தான் இந்த போட்டியில் வெற்றி முக்கியம்.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சீனியர் வீரர் பொல்லார்டு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரான ட்ரிஸ்டான் ஸ்டப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முருகன் அஷ்வினுக்கு பதிலாக ரித்திக் ஷோகீன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ட்ரிஸ்டான் ஸ்டப்ஸ், ராமன் தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ரித்திக் ஷோகீன், ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் - The New King of T20: வெறும் 5 போட்டியில் தொடர் நாயகன் விருது.. சேட்டனின் சாதனை
சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!