போல்டாகியும் அவுட்டாகாத வார்னரின் அதிர்ஷ்டம்..! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published May 12, 2022, 6:47 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் போல்டாகியும் டேவிட் வார்னர் அவுட்டாகாத சம்பவம், அந்த பந்தை வீசிய யுஸ்வேந்திர சாஹலுக்கு அதிருப்தியையும், ரசிகர்கள் வியப்பையும் ஏற்படுத்தியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

ஐபிஎல் 15வது சீசன் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவதும் கிட்டத்தட்ட உறுதி. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. எனவே எஞ்சிய 2 இடங்களுக்கு 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸுக்கு இடையே நேற்று நடந்த போட்டி முக்கியமானது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 160 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 161 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி மிட்செல் மார்ஷின் அதிரடியான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி.

இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. இந்த போட்டியில் 62 பந்தில் 89 ரன்களை குவித்து டெல்லி கேபிடள்ஸை ஜெயிக்க வைத்த மிட்செல் மார்ஷ், 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டியவர். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதை ரிவியூ செய்யாததால் தப்பினார் மார்ஷ். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக விளையாடி டெல்லி கேபிடள்ஸை வெற்றி பெற செய்தார். 

டேவிட் வார்னரும் 9வது ஓவரில் அவுட்டாகியிருக்க வேண்டியவர். அவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. சாஹல் வீசிய 9வது ஓவரின் கடைசி பந்து ஸ்டம்ப்பை தாக்கியது. ஆனால் பெயில் கீழே விழாததால் தப்பினார் வார்னர். அதன்பின்னர் அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று டெல்லி கேபிடள்ஸுக்கு போட்டியை முடித்து கொடுத்தார். வார்னர் போல்டாகியும் அவுட்டாகாத அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

pic.twitter.com/x2XIQ8k97h

— Patidarfan (@patidarfan)
click me!