ராஜஸ்தானை சுருட்டி டேபிள் டாப்க்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்!

Published : May 01, 2025, 11:41 PM IST
ராஜஸ்தானை சுருட்டி டேபிள் டாப்க்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்!

சுருக்கம்

ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரியான் ரிக்கல்டன் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

218 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 16.1 ஓவர்களில் 117 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அதிகபட்சமாக ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்தார். மும்பை அணி சார்பில் டிரெண்ட் போல்ட், கரண் சர்மா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹர் மற்றும் கேப்டன் பாண்டியாவுக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித் - ரிக்கல்டன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. ரியான் ரிக்கல்டன் 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த் சூர்யகுமார் யாதவ், கேப்டன் பாண்டியாவும் அதிரடியா விளையாடி, தலா 23 பந்துகளில் 48 ரன்க்ள குவித்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?