#IPL2021 சிஎஸ்கேவுக்கு எதிராக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸின் உத்தேச ஆடும் லெவன்..!

By karthikeyan VFirst Published Sep 18, 2021, 5:05 PM IST
Highlights

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் ஆடிய நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட எஞ்சிய போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. நாளை(செப்டம்பர் 19) தொடங்கும், ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாதியின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

ஐபிஎல் டைட்டில் வெல்வதை வாடிக்கையாக கொண்ட சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதும் போட்டி, 14வது சீசனின் 2வது பாதியை விறுவிறுப்புடன் தொடங்குவதற்கு சரியான போட்டியாக இருக்கும்.

முதல் பாதியில் இரு அணிகளும் மோதிய போட்டியில் சிஎஸ்கே அணி 218 ரன்கள் அடித்த நிலையில், பொல்லார்டின் அதிரடியான பேட்டிங்கால்(34 பந்தில் 87 ரன்கள்) மும்பை இந்தியன்ஸ் அணி 219 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமபலம் வாய்ந்த 2 சிறந்த அணிகள் மோதும் நாளைய போட்டி விறுவிறுப்பானதாக அமையும். அந்த போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் அணிகளிலேயே ஆடும் லெவன் காம்பினேஷனில் மிகவும் வலுவான அணி மும்பை இந்தியன்ஸ் தான். பேட்டிங், ஆல்ரவுண்டர்கள், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என அனைத்துவிதத்திலும் சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்தவித மாற்றமுமே செய்யப்பட தேவையில்லை. அதன் வழக்கமான ஆடும் லெவன் காம்பினேஷனுடனேயே அந்த அணி களமிறங்கும்.

அதன்படி, தொடக்க வீரர்கள் ரோஹித் - குயிண்டன் டி காக். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பாண்டியா பிரதர்ஸ், பொல்லார்டு. பொல்லார்டும் ஹர்திக் பாண்டியாவும் ஃபினிஷிங் ரோலையும் பார்த்துக்கொள்வார்கள். ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா, போல்ட், நேதன் குல்ட்டர்நைல். ஸ்பின்னர் ராகுல் சாஹர்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, நேதன் குல்ட்டர்நைல், பும்ரா, போல்ட், ராகுல் சாஹர்.
 

click me!