#IPL2021 மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்..! செம டீம்

By karthikeyan VFirst Published Sep 18, 2021, 4:30 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் ஆடிய நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட எஞ்சிய போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. நாளை(செப்டம்பர் 19) தொடங்கும், ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாதியின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

ஐபிஎல் டைட்டில் வெல்வதை வாடிக்கையாக கொண்ட சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதும் போட்டி, 14வது சீசனின் 2வது பாதியை விறுவிறுப்புடன் தொடங்குவதற்கு சரியான போட்டியாக இருக்கும்.

நாளை துபாயில் நடக்கும் இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஜெயித்தாலும் தோற்றாலும், தோனி பெரும்பாலும் அணி காம்பினேஷனில் தேவையில்லாமல் மாற்றங்களை செய்ய விரும்பாதவர். அந்தவகையில், இந்த சீசனின் முதல் பாதியில் சிஎஸ்கே அணி, அதன் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸைத்தான் எதிர்கொண்டு ஆடியது. அந்த போட்டியில் 218 ரன்கள் அடித்தும் கூட, பொல்லார்டின் அதிரடியான பேட்டிங்கால்(34 பந்தில் 87 ரன்கள்) மும்பை இந்தியன்ஸிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

எனவே அந்த போட்டியில் களமிறங்கிய அணியை வைத்து பார்க்கையில், அதிலிருந்து 2 மாற்றங்கள் செய்யப்படலாம். சாம் கரன் இந்த போட்டியில் ஆடாததால், அனுபவ ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ அணியில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த உற்சாகத்தில் இருக்கும் பிராவோவின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும் இந்த சூழலில், அவர் அணியில் கண்டிப்பாக எடுக்கப்படுவார்.

மேலும் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்படலாம். இந்த 2 மாற்றங்கள் மட்டுமே நடக்கும்.

தொடக்க வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ்
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் - மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு
கேப்டன், விக்கெட் கீப்பர் - தோனி
ஆல்ரவுண்டர்கள் - ஜடேஜா, ட்வைன் பிராவோ
ஃபாஸ்ட் பவுலர்கள் - ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் டெப்த் பயங்கரமாக உள்ளது. 10வது வீரரான தீபக் சாஹர் வரை நன்றாக பேட்டிங் ஆடத்தெரிந்தவர்கள். 11வது வீரரான ஹேசில்வுட்டும். பேட்டிங் ஆடத்தெரிந்தவர்.
 

click me!