ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸின் பெஸ்ட் பிளேயிங் லெவன்

By karthikeyan VFirst Published Mar 4, 2020, 12:04 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸின் மிகச்சிறந்த ஆடும் லெவன் எதுவாக இருக்கும் என்பதை பார்ப்பொம். 
 

ஐபிஎல்லில் இதுவரை நடந்து முடிந்த 12 சீசன்களில் வெற்றிகரமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை மிஞ்சி ஆதிக்கம் செலுத்துவது மும்பை இந்தியன்ஸ் தான். சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளை நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 2013, 2015, 2017, 2019 ஆகிய நான்கு முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வருகிறது. 

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பும்ரா, பொல்லார்டு, மலிங்கா என அந்த அணியின் கோர் டீம் வலுவாக இருப்பதும் அணி காம்பினேஷனும் தான் அந்த அணி கோலோச்சுவதற்கு முக்கிய காரணம். 

ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகக்கவனமாக தங்களுக்கு வேண்டிய வீரர்களை பக்காவா திட்டம்போட்டு எடுப்பதில் சிறந்த அணி. கடந்த சீசனில் குயிண்டன் டி காக் என்ற பெரிய வீரரை தட்டித்தூக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை கிறிஸ் லின், டிரெண்ட் போல்ட் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களை அணியில் எடுத்துள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த பலம்:

ரோஹித் சர்மா, ரூதர்ஃபோர்டு, சூர்யகுமார் யாதவ், அன்மோல்ப்ரீத் சிங், கிறிஸ் லின், சவுரப் திவாரி, தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, மிட்செல் மெக்லனகன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், மோஹ்சின் கான், ப்ரின்ஸ் பல்வந்த் ராய் சிங், திக்விஜய் தேஷ்முக், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ், பொலார்டு, அனுகுல் ராய், நாதன் குல்ட்டர் நைல், இஷான் கிஷான், குயிண்டன் டி காக், ஆதித்ய தரே. 

இவர்களில் எந்த 11 வீரர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும்பாலும் இறங்க வாய்ப்புள்ளது என்று பார்ப்போம். 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் தான் இறங்குவார்கள். ஒருவேளை கிறிஸ் லின் செம ஃபார்மில் இருந்தால், மிடில் ஆர்டரில் தடுமாற்றம் இருக்கும்பட்சத்தில் லின்னையும் டி காக்கையும் தொடக்க வீரர்களாக இறக்கிவிட்டு, ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் ஆட வாய்ப்புள்ளது. 

எனவே ரோஹித் சர்மா, டி காக், கிறிஸ் லின் ஆகிய மூவரும் டாப் 3 பேட்டிங் ஆர்டர்கள். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு ஆகிய மூவரும் மிடில் ஆர்டரில் வலுசேர்ப்பார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ராவுடன் டிரெண்ட் போல்ட் மற்றும் மலிங்கா ஆகிய இருவரில் ஒருவர் மாறி மாறி இறக்கப்பட வாய்ப்புள்ளது. ஸ்பின் பவுலராக ராகுல் சாஹர் ஆடுவார். க்ருணல் பாண்டியாவும் ஸ்பின் பவுலிங் வீசுவார் என்பதால் அவருடன் ராகுல் சாஹர் இணைந்து ஸ்பின் பவுலிங்கை பார்த்துக்கொள்வார். 

Also Read - 37 பந்தில் அதிரடி சதம்.. செம கெத்தா கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா.. வீடியோ

மும்பை இந்தியன்ஸின் சிறந்த பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ராகுல் சாஹர், பும்ரா, டிரெண்ட் போல்ட்/மலிங்கா.
 

click me!