ஒய் பிளட் சேம் பிளட், என்ன சோனமுத்தா போச்சா....: MI, RCB பிளே ஆஃப் வாய்ப்பு…கோவிந்தா கோவிந்தா?

By Rsiva kumar  |  First Published Apr 3, 2024, 10:58 AM IST

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.


ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இதுவரையில் 15 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இவற்றில் 12 லீக் போட்டிகளில் ஹோம் மைதான அணியே வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் அவே அணி வெற்றி பெற்றிருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ்:

Tap to resize

Latest Videos

அகமதாபாத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் குஜராத் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

ஹைதராபாத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்:

வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்தது. ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், குறைந்தது 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 11 போட்டிகள் உள்ள நிலையில், இவற்றில் 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

மும்பை இந்தியன்ஸ் போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு 8, 8, 8, 10 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதே போன்று கடந்த 2022 ஆம் ஆண்டு 8, 9, 9, 10 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் 8ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் உள்ளன. எனினும், இரு அணிகளும் இதே நிலையில் விளையாடினால் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது ரொம்பவே கடினம்.

click me!