தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்ட ஆர்சிபி – முதல் அணியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை!

By Rsiva kumar  |  First Published Apr 3, 2024, 9:07 AM IST

லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடந்த 15ஆவது லீக் போட்டியில் இந்த தொடரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டைத்துள்ளது.


பெங்களூருவின் கோட்டையான எம்.சின்னச்சுவாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு குயீண்டன் டி காக் நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர், 81 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் வந்த நிக்கோலஸ் பூரன் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துக் கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 181 ரன்கள் குவித்தது.

பின்னர், 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி விளையாடியது. இதில், தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடிய விராட் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 22 ரன்கள் எடுத்து, தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் ஓவரில் ஆட்டமிழந்தார். இது அவரது முதல் ஐபிஎல் விக்கெட். இவரைத் தொடர்ந்து கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 19 ரன்களில் ரன் அவுட்டானார்.

Tap to resize

Latest Videos

அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறந்த ஆல்ரவுண்டர் என்று அணியில் வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன் 9 ரன்களில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி 7.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் 11 ரன்னிலும், ரஜத் படிதார் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவ்வளவு தான் ஆர்சிபி என்று எண்ணிக் கொண்டிருந்த போது மஹிபால் லோம்ரார் வந்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசவே ஆட்டம் சூடு பிடித்தது. எனினும், அவர் 33 ரன்களில் ஆட்டமிழக்க மெல்ல மெல்ல லக்னோவின் பக்கம் வெற்றி திரும்பியது.

தினேஷ் கார்த்திக்கும் 4 ரன்களில் நடையை கட்ட, கடைசியில் வந்த முகமது சிராஜ் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசி ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். இறுதியில் ஆர்சிபி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலு, இந்த சீசனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.

ஆர்சிபி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த போட்டி உள்பட 2 போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோ விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

click me!