IPL 2024: ஐபிஎல் தொடரில் 250 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காத எம்.எஸ்.தோனி, இந்த சீசனில் சதம் அடிப்பாரா?

By Rsiva kumarFirst Published Mar 10, 2024, 1:42 PM IST
Highlights

ஐபிஎல் சீசன்களில் இதுவரையில் தோனி 250 போட்டிகள் விளையாடிய நிலையில் ஒரு சீசனில் கூட சதம் அடிக்கவில்லை என்பது ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 என்று 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. அதோடு, 2008, 2012, 2013, 2015, 2019 என்று 5 முறை ஐபிஎல் தொடரில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

இதில் 3 முறை மும்பை இந்தியன்ஸ், ஒரு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஒரு முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி இதுவரையில் 250 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 24 அரைசதங்கள் உள்பட 5082 ரன்கள் எடுத்துள்ள தோனி ஒரு முறை கூட சதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக 84* ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும்,349 பவுண்டரி, 239 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். சிஎஸ்கே அணியில் ரூ.12 கோடிக்கு தோனி இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 32* ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு 50* ரன்கள் எடுத்திருக்கிறார்.

எம்.எஸ்.தோனி தவிர சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 226 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா 2 அரைசதங்கள் உள்பட 2677 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 62* ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!