CSK Top Scorer: சிஎஸ்கேயில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடம், தோனி 2ஆவது இடம்!

By Rsiva kumarFirst Published Mar 10, 2024, 1:00 PM IST
Highlights

ஐபிஎல் தொடர்களில் இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 5529 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ மூலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசன் நடைபெற்றது. இதையடுத்து இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.

இதுவரையில் நடந்த சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். எம்.எஸ்.தோனி 2ஆவது இடத்திலும், பாப் டூப்ளெசிஸ் 3ஆவது இடத்திலும், மைக் ஹஸ்ஸி 4ஆவது இடத்திலும், முரளி விஜய் 5ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஐபிஎல் – சிஎஸ்கே அணியில் டாப் ஸ்கோர் எடுத்தவர்கள்:

சுரேஷ் ரெய்னா – 5529

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 வரையில் தோனி தலைமையில் விளையாடியிருக்கிறார். இந்த ஆண்டுகளில் மொத்தமாக 200 போட்டிகளில் விளையாடி ரெய்னா 5529 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109* ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.தோனி – 5082

எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் சிஎஸ்கே அணியானது டிராபியை கைப்பற்றியது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் தோனி இடம் பெற்று வருகிறார். இதுவரையில் 250 போட்டிகளில் விளையாடிய தோனி 24 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 5082 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார்.

பாப் டூப்ளெசிஸ் – 2932 ரன்கள்

சிஎஸ்கே அணியில் 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று விளையாடிய பாப் டூப்ளெசிஸ் 100 போட்டிகளில் 2932 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 2022 ஆம் அண்டு ஆர்சிபி அணியில் இடம் பெற்றார்.

மைக் ஹஸ்ஸி – 2213 ரன்கள்

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக் ஹஸ்ஸி 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இதில், 64 போட்டிகளில் விளையாடிய மைக் ஹஸ்ஸி அதிகபட்சமாக 116* ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக 2213 ரன்கள் எடுத்துள்ளார்.

முரளி விஜய் – 2205 ரன்கள்

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற முரளி விஜய் 89 போட்டிகளில் விளையாடி 2205 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 127 ரன்கள் எடுத்துள்ளார்.

click me!