
தோனி:
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆல்டைம் சிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்களில் ஒருவர் தோனி. 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
கேப்டனானதுமே நடந்த பெரிய தொடரான டி20 உலக கோப்பையை 2007ம் ஆண்டு இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். அதன்பின்னர் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்துவிதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர்.
இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4876 ரன்களை அடித்துள்ள தோனி, 256 கேட்ச்களையும் 38 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,773 ரன்களை குவித்துள்ளார். மேலும் 321 கேட்ச்களையும் 123 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் தோனி.
இதையும் படிங்க - ICC WTC புள்ளி பட்டியல்: பாக்., - ஆஸி., டெஸ்ட் டிராவாவது இந்திய அணிக்கு அனுகூலம்..!
பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்து வகையிலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டுக்காக அபாரமான பங்களிப்பை செய்த தோனி, ஐபிஎல்லிலும் சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தி 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனில் 5வது முறையாக சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் உள்ளார் தோனி. வரும் 26ம் தேதி ஐபிஎல் 15வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, சூரத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
இதையும் படிங்க - Joe Root: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அபார சாதனை.. ஜாம்பவான் அலெஸ்டர் குக்கையே அலேக்கா தூக்கி அடித்தார்
ஜெர்சி எண் 7க்கான காரணத்தை கூறிய தோனி:
இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்த ரசிகர்களுடனான மெய்நிகர் உரையாடலில் கலந்துகொண்டார் தோனி. அப்போது தோனியிடம், அவரது ஜெர்சி எண் 7ன் ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, ஆரம்பக்காலத்தில் அனைவரும் 7 எனது அதிர்ஷ்ட எண் என்றுதான் நினைத்தனர். ஆனால் நான் மிக எளிய காரணத்திற்காகத்தான் 7ஐ தேர்வு செய்தேன். ஜூலை 7ம் தேதி நான் பிறந்தேன். ஜூலை 7வது மாதம்; 7வது மாதத்தின் 7ம் தேதியில் பிறந்ததால் 7 என்ற எண்ணை எனது ஜெர்சி எண்ணாக தேர்வு செய்தேன் என்றார் தோனி.