மெர்சிடஸ் எஸ்யூவில் ரசிகருக்கு செஃல்பி கொடுத்த தோனி – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Jun 18, 2024, 3:24 PM IST

ராஞ்சியில் உள்ள தனது பண்ணைவீட்டிற்கு செல்லும் வழியில் ரசிகரின் அன்பு கட்டளைக்கு ஏற்ப மெர்சிடஸ் எஸ்யூவில் வலம் வந்த தோனி செஃல்பி கொடுத்துள்ளார்.


ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது.

ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து சாக்‌ஷி மற்றும் ஜிவா உடன் இணைந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த தோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்து ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வளர்ப்பு பிராணியான நாயுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் தான் இன்று மெர்சிடஸ் எஸ்யூவியில் வந்து கொண்டிருந்த தோனியிடம் ரசிகர் ஒருவர் ஒரே ஒரு போட்டோ சார் என்று கெஞ்சியுள்ளார். இதைத் தொடர்ந்து முதலில் மறுத்த தோனி அதன் பிறகு ஜீப் கண்ணாடியை கீழே இறக்கி ரசிகருக்கு போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Deleted scene from my life!! 🥺💔 pic.twitter.com/L6Py666zGz

— DIPTI MSDIAN ( Dhoni's Family ) (@Diptiranjan_7)

 

click me!