IPL 2021 தோனி கோட்டைவிட்டது கேட்ச்சா மேட்ச்சா..? தடுமாறிய தல.. வெளுத்துவாங்கும் வெங்கடேஷ் ஐயர்

By karthikeyan VFirst Published Oct 15, 2021, 9:54 PM IST
Highlights

வெங்கடேஷ் ஐயரின் கேட்ச்சை 2வது ஓவரில் தோனி கோட்டைவிட, அந்த வாய்ப்பை பயன்படுத்தி அடித்து ஆடிவருகிறார் வெங்கடேஷ்.
 

ஐபிஎல்  14வது சீசனின் இறுதிப்போட்டி துபாயில் நடந்துவருகிறது. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் அதிரடியாக அடித்து ஆடி 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்தார். ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களும், உத்தப்பா 15 பந்தில் 31 ரன்களும், மொயின் அலி 20 பந்தில் 37 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 193 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவரும் கேகேஆர் அணியின் தொடக்க வீரரும் அந்த அணியின் நட்சத்திர வீரருமான வெங்கடேஷ் ஐயர், ஹேசில்வுட் வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஹேசில்வுட் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் கொடுத்த கேட்ச்சை அரிதினும் அரிதாக தோனி கோட்டைவிட்டார். அந்த கேட்ச் கொடுத்தபோது வெங்கடேஷ் ஐயர் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தார்.

ஆனால் தோனி கேட்ச்சை கோட்டைவிட்ட அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் ஐயர், தொடர்ந்து அடித்து ஆடிவருகிறார். அவருடன் இணைந்து கில்லும் அடித்து ஆடிவருகிறார். வெங்கடேஷ் ஐயருக்கு தோனி கோட்டைவிட்டது வெறும் கேட்ச்சையா அல்லது மேட்ச்சையா என்பதை பார்க்க வேண்டும்.
 

click me!