#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்

By karthikeyan VFirst Published Jun 12, 2021, 9:47 PM IST
Highlights

இந்திய வீரர்களுக்கு நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி கடும் சவாலளிப்பார் என்று இங்கிலாந்து முன்னள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதால் அந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுமே மிகச்சிறந்த வீரர்களை கொண்ட மற்றும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சமபலத்துடன் திகழும் அணிகள் ஆகும். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது என்றால் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லேதம், கான்வே, ஹென்ரி நிகோல்ஸ் என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோர் என்றால், நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், இஷ் சோதி, ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர்.  இப்படியாக இரு அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இங்கிலாந்தில் கண்டிஷன் ஸ்விங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்துக்கு அது கூடுதல் சாதகமாக இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மாண்டி பனேசர், ஸ்விங் கண்டிஷனில் இந்திய வீரர்களுக்கு டிம் சௌதி பெரும் பிரச்னையாக இருப்பார். புத்திசாலியான பவுலர் டிம் சௌதி. ஸ்விங் பவுலரான டிம் சௌதி இந்திய வீரர்களுக்கு சவாலாக இருப்பார். இந்திய வீரர்கள் நியூசிலாந்து பவுலர்களின் ஸ்விங்கை எதிர்கொள்ள கண்டிப்பாக தீவிர பயிற்சி செய்வார்கள் என்றார்.
 

click me!