#ENGvsSL இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! முக்கியமான தலைகள் மிஸ்ஸிங்

Published : Jun 12, 2021, 08:54 PM IST
#ENGvsSL இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! முக்கியமான தலைகள் மிஸ்ஸிங்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. வரும் 14ம் தேதியுடன் அந்த தொடர் முடிகிறது. அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இங்கிலாந்து அணி.

இலங்கை அணி இங்கிலாந்துக்கு சென்று இந்த தொடரில் ஆடுகிறது. வரும் 23ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் பின்னர் ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான 16 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.

அதனால் கடைசியாக 2015ல் டி20 போட்டியில் ஆடிய ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் மற்றும் 2019ல் ஆடிய டேவிட் வில்லி ஆகிய இருவருக்கும் மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி:

ஒயின் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் கரன், டாம் கரன், லியாம் டாவ்சன், கிறிஸ் ஜோர்டான், லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷீத், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!