டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஆண்டர்சன்..! இனிமேல் இதை முறியடிப்பதெல்லாம் நடக்காத காரியம்

By karthikeyan VFirst Published Jun 12, 2021, 7:41 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வீரர்களை டக் அவுட்டில் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 617 விக்கெட்டுகளுடன் 4ம் இடத்தில் இருக்கும் ஆண்டர்சன், இன்னும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்த பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்திற்கு முன்னேறிவிடுவார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆண்டர்சன். இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர் உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆண்டர்சன்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் ஆண்டர்சன். எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் நீல் வாக்னரை டக் அவுட்டாக்கினார் ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்னே அடிக்கவிடாமல் ஆண்டர்சன் வீழ்த்திய 105வது விக்கெட் இது.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வீரர்களை டக் அவுட்டில் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதற்கு முன் மெக்ராத் 104 வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட்டாக்கியதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையையும் ஆண்டர்சன் தகர்த்துள்ளார். இந்த பட்டியலில் ஷேன் வார்ன்(102 விக்கெட்டுகள்) மற்றும் முத்தையா முரளிதரன்(102 விக்கெட்டுகள்) ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சனின் இந்த சாதனையை இனிமேல் ஒரு பவுலர் முறியடிப்பதெல்லாம் கடினமான காரியம்.
 

click me!