India vs South Africa:டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டும் ஷமி!கும்ப்ளே, ஸ்ரீநாத்துடன் இணைகிறார்

Published : Jan 10, 2022, 03:07 PM IST
India vs South Africa:டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டும் ஷமி!கும்ப்ளே, ஸ்ரீநாத்துடன் இணைகிறார்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி மிகச்சிறந்த மைல்கல்லை எட்டவுள்ளார்.  

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

கேப்டவுனில் வரும் 11ம் தேதி(நாளை) தொடங்கும் டெஸ்ட் போட்டி தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும். அந்த போட்டியில் இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினால் அபாரமான மைல்கல்லை எட்டுவார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளும், 2வது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளும் என மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. இதுவரை மொத்தமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 45 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் 5 விக்கெட் வீழ்த்தினால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார். இதுவரை அனில் கும்ப்ளே (84), ஜவகல் ஸ்ரீநாத் (64), ஹர்பஜன் சிங் (60), அஷ்வின் (56) ஆகிய நால்வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ஷமி இன்னும் 5 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தினால் இந்த பட்டியலில் இணைவார். இன்னும் 5 விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய பவுலர், 2வது இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற மைல்கல்லை எட்டுவார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!