#ENGvsIND இந்திய அணி குறைந்தபட்சம் இதையாவது செய்திருக்க வேண்டும்..! அசாருதீன் அதிரடி

Published : Aug 28, 2021, 10:29 PM IST
#ENGvsIND இந்திய அணி குறைந்தபட்சம் இதையாவது செய்திருக்க வேண்டும்..! அசாருதீன் அதிரடி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது பரவாயில்லை என்றாலும், குறைந்தபட்சம் போட்டியை 5வது நாள் வரையாவது எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அருமையாக பேட்டிங் ஆடி 432 ரன்களை குவித்தது. 354 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்டம் முழுவதும் பேட்டிங் ஆடி, 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை குவித்திருந்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய ஸ்கோர் அடித்து இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு கடும் சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனிலேயே எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுமே மோசமாக இருந்தது. அதற்கு நேர்மாறாக இங்கிலாந்து அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சிறப்பாக இருந்தது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது அசாருதீன், பேட்டிங் டெக்னிக்கில் பிரச்னை இருந்தது. ஸ்விங் பவுலிங்கை எதிர்கொண்ட விதம் சரியில்லை. இன்னும் கொஞ்சம் நன்றாக பேட்டிங் ஆடி, இந்த போட்டியை குறைந்தபட்சம் 5வது நாள் வரையாவது எடுத்து சென்றிருக்கலாம் என்று அசாருதீன் கருத்து தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!