போட்டிக்கு போட்டி பொளந்துகட்டும் ரிஸ்வான்.. 4வது டி20யிலும் அரைசதம்! ஆனாலும் இங்கி.,க்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Sep 25, 2022, 9:57 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் முகமது ரிஸ்வான் 88 ரன்களை குவித்தும் கூட பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே அடித்தது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்க்கும் நிலையில், கராச்சியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வில் ஜகஸ், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), டேவிட் வில்லி, லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்ளி.

இதையும் படிங்க இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஆசிஃப் அலி, உஸ்மான் காதிர், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், முகமது வாசிம்.
 
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வானும் பாபர் அசாமும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவரில் 97 ரன்களை சேர்த்தனர். பாபர் அசாம் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் அடி நொறுக்கி நல்ல ஸ்கோர் செய்துவரும் முகமது ரிஸ்வான், இந்த போட்டியிலும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் சதமடிக்கும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டார். ஆசிய கோப்பையில் 281 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரராக அந்த தொடரை முடித்தார் ரிஸ்வான்.

இதையும் படிங்க - T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் 68, 88, 8 ரன்களை குவித்த ரிஸ்வான், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 67 பந்துகளில் 88 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ரிஸ்வானும் 67 பந்துகளில் 88 ரன்கள் தான் அடித்தார். செட்டில் ஆன அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்க வேண்டும் அல்லது இன்னும் குறைவான பந்துகளில் இந்த ரன்னை அடித்திருக்க வேண்டும். ரிஸ்வான் 88 ரன்கள் அடித்தும் கூட, 20 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே அடித்த பாகிஸ்தான் அணி, 167 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. கராச்சியில் இங்கிலாந்து அணிக்கு இது எளிய இலக்கே.
 

click me!