PAK vs ENG: 4வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் தலா 2 மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Sep 25, 2022, 7:52 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

கராச்சியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

இரு அணிகளிலும் தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணி போட்டிக்கு போட்டி இளம் வீரர்களை அறிமுகம் செய்கிறது. இன்றைய போட்டியில் ஆலி ஸ்டோன் என்ற ஃபாஸ்ட்பவுலரை அறிமுகம் செய்துள்ளது. மார்க் உட்டுக்கு பதிலாக ஆலி ஸ்டோன் ஆடுகிறார். மேலும் டேவிட் மலானுக்கு ஓய்வளிக்கப்பட்டு அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வில் ஜகஸ், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), டேவிட் வில்லி, லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்ளி.

பாகிஸ்தான் அணியில் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது வாசிம் மற்றும் ஹைதர் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஆசிஃப் அலி, உஸ்மான் காதிர், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், முகமது வாசிம்.
 

click me!