எனக்கு பிடித்த மிகச்சிறந்த டாப் 3 சமகால ஃபாஸ்ட் பவுலர்கள் இவங்கதான்..! முகமது ஆமீர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Mar 18, 2021, 10:16 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான முகமது ஆமீர், சமகாலத்தில் தனக்கு மிகவும் பிடித்த சிறந்த பவுலர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருக்கிறது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆமீர், முகமது சமி, முகமது ஆசிஃப், வஹாப் ரியாஸ் என அந்தந்த காலக்கட்டத்தில் சிறந்த பவுலர்களை பெற்றிருந்த அணி பாகிஸ்தான் அணி. 

அந்தவகையில், அப்படியான சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் முகமது ஆமிர். முகமது ஆமீர் பாகிஸ்தான் அணியின் சீனியர் நட்சத்திர பவுலர். அருமையான ஃபாஸ்ட் பவுலரான ஆமீர், 2010ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 5 ஆண்டு தடை பெற்றார். 

5 ஆண்டு கால தடைக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுத்த முகமது ஆமீர், கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வறிவித்தார். 36 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முகமது ஆமீர் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும் 50 டி20 போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

சிறந்த ஃபாஸ்ட் பவுலரான ஆமீர், சமகால கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த டாப் 3 ஃபாஸ்ட் பவுலர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆமீர், டிரெண்ட் போல்ட். போல்ட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். பும்ரா 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக வீசிவருகிறார். 3வது மிட்செல் ஸ்டார்க். அடுத்தது ரபாடா. ரபாடாவும் சிறந்த பவுலர் என்று ஆமீர் தெரிவித்துள்ளார்.
 

click me!